அமீரகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சீட் பெல்ட் அணியாத 3 லட்சம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

ஐக்கிய அரபு அமீரகத்தில் வாகன ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் சீட் பெல்ட் அணியாததற்காக
கடந்த இரண்டு ஆண்டுகளில் 3,16,000 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 1,23,012 ஓட்டுநர்கள் மற்றும் 26,077 பயணிகள் சீட் பெல்ட் சட்டத்தை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் 96,714 ஓட்டுநர்கள் மற்றும் 70,261 பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சகம் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் போக்குவரத்து சட்டத்தின்படி ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் சீட் பெல்ட் அணியவில்லை என்றாலும் அல்லது குழந்தைகள் கார் இருக்கையில் அமரவில்லை என்றாலும் 400 திர்ஹம் அபராதமாக விதிக்கப்படும் மட்டும் ஓட்டுநர் உரிமத்தில் நான்கு கருப்பு புள்ளிகளும் பதிவு செய்யப்படும்.