சவூதி அரேபியா புதிய பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது
கொரோன பரவலை தடுக்கும் முயற்சியாக சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் புதிய பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்ததுள்ளது. இது பிப்ரவரி 9, 2022 (7/8/1443) புதன்கிழமை அதிகாலை 1 மணி முதல் அமலுக்கு வருகிறது.
சவூதி அரேபியாவை விட்டு வெளியேறும் குடிமக்கள் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது அல்லது பூஸ்டர் டோஸை எடுத்திருந்தால் மட்டுமே நாட்டை விட்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அவர்கள் புறப்பட்ட நாளிலிருந்து 48 மணி நேரத்திற்குள் எதிர்மறையான PCR அல்லது ஆன்டிஜென் சோதனை முடிவை வழங்க வேண்டும்.
8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த நடைமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.