குவைத் லிபரேஷன் டவர் பிப்ரவரி 6 முதல் பொதுமக்களுக்காக திறக்கப்படுகிறது

குவைத்தின் தேசிய விடுமுறை கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பிப்ரவரி 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் குவைத் லிபரேஷன் டவர் என்ற கோபுரம் பொதுமக்களுக்காக திறக்கப்படுகிறது.

இது பிப்ரவரி 28 ஆம் தேதி வரை அனைவருக்கும் இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிபரேஷன் டவர் இணையதளத்தில் முன் பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளி மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். மாலை 3:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை அனைத்து பொதுமக்களும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபுரத்தின் 150 மீட்டர் உயரத்தில் இருந்து 360 டிகிரியில் குவைத்தின் காட்சியை பார்க்கலாம்.