ஓமானில் வரும் 23 ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு தடை
ஓமானில் கொரோன தொற்று அதிகரித்து வருவதால், அதை கட்டுப்படுத்துவதற்காக புதிய முடிவுகளை ஓமானின் உச்சக் கழு வெளியிட்டுள்ளது.
உச்சக் குழுவின் அறிக்கையில், நாட்டில் கொரோன தொற்றின் நிலைமை குறித்த அறிக்கைகளை மதிப்பாய்வு செய்தது மற்றும் கொரோனாவின் மாறுபாடான ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையின் அதிகரிப்பையும் குறிப்பிட்டது.
நிலைமையைக் கையாளும் வகையில் உச்சக் குழு பின்வரும் முடிவைகளை எடுத்துள்ளது. இது ஜனவரி 23 ஞாயிற்றுக்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு அமலில் இருக்கும்.
- வெள்ளிக்கிழமை தொழுகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் மசூதிகளில் நடத்தப்படும் தினசரி ஐந்து வேலை தொழுகைகளில் 50% மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும்.
- அரசு மற்றும் பிற பொது நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை 50% வரை குறைக்க வேண்டும்.
- பொது நிகழ்ச்சிகளை நிறுத்தி வைப்பது அல்லது பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த வேண்டும் என ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
- தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ளாதவர்கள் எடுக்குமாறு உச்சக் குழு அனைவரையும் கேட்டுக்கொள்கிறது