10 நாட்களுக்கு பிறகே இரண்டாம் உம்ரா செய்ய அனுமதி
உம்ரா செய்வதற்கான அனுமதியைப் பெற்ற யாத்ரீகர்கள் முதல் உம்ராவை நிறைவேற்றிய பின்னர் 10 நாட்களுக்கு பிறகே இரண்டாவது உம்ராவைச் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இரண்டாவது உம்ரா செய்பவர்கள் ஈட்மர்னா அல்லது தவக்கல்னா விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.
சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது.