காலாவதியான டயர்களில் வாகனம் ஓட்டினால் 500 திர்ஹம் அபராதம் – அபுதாபி காவல்துறை அறிவிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் தகுதியற்ற டயர்களைக் கொண்ட வாகனங்களை ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் மற்றும் அவர்களது வாகனங்கள் ஏழு நாட்களுக்கு சிறை வைக்கப்படும் என்று அபுதாபி காவல்துறை செவ்வாய்க்கிழமை எச்சரித்துள்ளது.

அதனுடன் போக்குவரத்திர்க்கான நான்கு கறுப்பு புள்ளிகளையும் காவல்துறை வழங்கும் என தெரிவித்தது.

கோடைகாலத்தில் சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணம் தகுதியற்ற டயர்கள். அவை ஓட்டுநர்கள் மற்றும் பிற சாலை பயனர்களின் பாதுகாப்பிற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்று போலீசார் தெரிவித்தனர்.

கோடை காலத்தின் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை எட்டும் போது ​​காலாவதியான டயர்களை பயன்படுத்துவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன மற்றும் அதிகப்படியான பயன்பாடு காரணமாக டயர்களின் தேய்மானமும் விபத்துகளுக்கு காரணமாக உள்ளது.

மேலும் அதிக சுமை விபத்துக்களை ஏற்படுத்துவதால் அதிக சுமைகளைத் தவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் டயர்களை சரிபார்த்து, அவர்களின் பாதுகாப்பையும், வெப்பநிலை அதிகரித்ததன் விளைவாக கோடையில் கடுமையான சாலை விபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய சேதங்கள் அல்லது விரிசல்கள் இல்லாதிருப்பதையும் உறுதிப்படுத்துமாறு அபுதாபி காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மத்திய செயல்பாட்டுத் துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குநரகத்தின் போக்குவரத்துத் துறை இயக்குநர் கர்னல் முகமது சேலம் அல் ஷெஹி தெரிவிக்கையில் டயர்களின் பொருத்தம், அதன் அளவீட்டு மற்றும் வெப்பநிலை ஆகியவற்றை ஓட்டுனர்கள் உறுதிப்படுத்தவும் என கேட்டுக்கொண்டார்.

டயர் தாங்கக்கூடிய பொருத்தமான சுமை மற்றும் உற்பத்தி ஆண்டு ஆகியவற்றை சரிபார்க்க வாகன ஓட்டிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார். அதிக சாலைப் பயணங்களில் டயர்கள் நீண்ட பயணங்களுக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

வரும் ஜூலை 1 2020 காலை 8 மணி முதல் அபுதாபியில் உள்ள பொது பார்க்கிங்கிற்கான கட்டணத்தை மீண்டும் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரகத்திம் முழுவதும் பொது பார்க்கிங் பயன்படுத்துபவர்களுக்கு மூன்று மாத காலம் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

மீண்டும் கட்டண முறை தொடங்க இருப்பதால் பார்க்கிங் கட்டணங்களை மொபைல் தொலைபேசி வழியாக, நேரடி கட்டண சேவை வழியாக அல்லது தடத்தின் பயன்பாடு மூலம் பாதுகாப்பாக செலுத்த வேண்டும் என்று அபுதாபி போக்குவரத்துத் துறை கேட்டுக்கொண்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.