சவூதி அரேபியாவில் புதியவகை நம்பர் பிளேட்டுகள் அறிமுகம்

பிரபலமான சவூதி தளங்கள் மற்றும் கலாச்சார சின்னங்களை சித்தரிக்கும் ஐந்து தனித்துவமான வடிவமைப்புகளுடன் வாகன நம்பர் பிளேட்டுகளை சவூதி அரேபியாவின் கலாச்சாரம், உள்துறை மற்றும் நிதி அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.

இதில் நாட்டின் தேசிய சின்னம் (இரண்டு குறுக்கு வாள்கள் மற்றும் ஒரு பனை மரம்), துரைஃப் மாவட்டத்தின் திரியா வரலாறு, ஹெக்ரா மற்றும் சவூதி விஷன் 2030 இன் லோகோ ஆகியவை அடங்கும்.

துரைஃப் மற்றும் ஹெக்ரா இரண்டும் செழுமையான கலாச்சார தளங்கள் ஆகும். அவை யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள சவூத அரேபியாவின் ஆறு தளங்களில் ஒன்றாகும். அதே சமயம் சவூதி விஷன் 2030 இன் லோகோ இராச்சியத்தின் தற்போதைய விரிவான வளர்ச்சியைக் குறிக்கிறது.

சவூதியின் நிறுவன தினமான இன்று பிப்ரவரி 22 முதல் SR800 செலவில் இந்த சிறப்பு நம்பர் பிளேட்டுகளை வழங்கத் தொடங்கியுள்ளது.