ஓமானில் உள்ள ஹோட்டல்களில் மாநாடுகள் மற்றும் நிகழ்வுகளை 70% திறனில் நடத்த அனுமதி
ஓமானில் உள்ள ஹோட்டல்களில் அதன் 70% திறனில் மாநாடுகள் மற்றும் நிகழ்வுகளை நடத்த ஓமான் பாரம்பரிய மற்றும் சுற்றுலா அமைச்சகம் அனுமதித்துள்ளது.
பொது அரங்குகள் மற்றும் நிகழ்வுகளில் மாநாடுகள் (உள்ளூர் மற்றும் சர்வதேச) போன்ற செயல்பாடுகளை நடத்துவதற்கான வரம்பை 50% லிருந்து 70% ஆக உயர்த்தி ஓமான் உச்சக் குழு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
நிகழ்வுகளில் பங்கேற்கும் அனைத்து பங்கேற்பாளர்களும் கொரோன தடுப்பூசியைப் பெற்றதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.