அமீரகத்தில் பலத்த மணல்காற்று வீச வாய்ப்புள்ளதாக போலீசார் எச்சரிக்கை
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை மணல்காற்று வீசும் காரணத்தால் குறைந்த பார்வைத்திறன் இருப்பதால் சாலைகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அபுதாபி போலீசார் தங்கள் சமூக ஊடகம் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காலை 6:30 மணி முதல் மாலை 6 மணி வரை சில உள் மற்றும் கடலோரப் பகுதிகளில் 40 கி.மீ வேகத்தில் மணல்காற்று வீசும் என்று தேசிய வானிலை மையம் (NCMS) தெரிவித்துள்ளது.
தூசி மற்றும் மணல் அதிகமாக வீசுவதால் சாலைகளில் செல்லும்போது தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஓட்டுனர்கள் மற்றும் பாதசாரிகளுக்கு NCMS கேட்டுக்கொண்டுள்ளது.
காவல்துறையினர் சமூக ஊடகம் மூலம் ஓட்டுநர்கள் தங்கள் பாதுகாப்பு மற்றும் பிறரின் பாதுகாப்பிற்காக போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டனர். உங்கள் தொலைபேசி மூலம் வீடியோக்களை எடுத்து உங்கள் கவனத்தை இழக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.