ஓமானுக்கு வரும் பயணிகள் இனி சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவு செய்யத் தேவையில்லை

ஓமானுக்குச் வரும் பயணிகள் இனி சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவு செய்யத் தேவையில்லை என்று ஓமான் நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAA) தெரிவித்துள்ளது.

கடந்த திங்கள்கிழமை (பிப்ரவரி 21, 2022) வெளியிடப்பட்ட அறிக்கையில் பயணிகள் இனி www.travel.moh.gov.om இல் பதிவு செய்ய வேண்டியதில்லை என்று CAA தெரிவித்துள்ளது. இருப்பினும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பயணிகள் “அங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசியின் குறைந்தபட்சம் இரண்டு டோஸ்களைப் பெற்றிருப்பதைக் குறிக்கும் தடுப்பூசிச் சான்றிதழை” சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து பயணிகளும், வந்தவுடன் அல்லது வந்த 24 மணி நேரத்திற்குள் எதிர்மறையான COVID-19 PCR பரிசோதனையை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் COVID-19 ஐ உள்ளடக்கிய ஒரு உடல்நலக் காப்பீட்டையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று CAA தெரிவித்துள்ளது.