முஸ்லிம் பெண்களை துன்புறுத்திய சம்பவங்கள் குறித்து இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பு (OIC) கவலை
கர்நாடக மாநிலத்தில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதையும், அங்கு முஸ்லிம் பெண்களை துன்புறுத்திய சம்பவங்கள் குறித்தும் மற்றும் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் இந்துத்துவா ஆதரவாளர்களால் முஸ்லிம்கள் இனப்படுகொலைக்கான சமீபத்திய பொது அழைப்பையும் சுட்டிக்காட்டி 57 இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) தலைமைச் செயலகம் ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளது.
மேலும் முஸ்லிம்கள் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள், பல்வேறு மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான சட்டங்களின் சமீபத்திய போக்கு மற்றும் இந்துத்துவா குழுக்களின் அற்ப சாக்குப்போக்குகளில் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்கள் இவை அனைத்தும் இஸ்லாமோஃபோபியாவின் வளர்ந்து வரும் போக்கைக் காட்டுகின்றன எனவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சர்வதேச சமூகத்தை குறிப்பாக ஐ.நா சபை மற்றும் மனித உரிமைகள் பேரவையை OIC தலைமைச் செயலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்யவும், அவர்களின் வாழ்க்கை முறையைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் வெறுப்புக் குற்றங்களைத் தூண்டுபவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறும் OIC தலைமைச் செயலகம் வலியுறுத்தியுள்ளது.
OIC இன் அறிக்கை: https://www.oic-oci.org/topic/?t_id=30849&t_ref=19650&lan=en