ஓமான்: மஸ்கத்தில் பொது இடங்களை திறப்பதற்கான எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை

கொரோன வைரஸின் பரவல் அதிகரித்துக் கொண்டிருப்பதால் பொதுமக்கள் கூடும் இடங்களைத் திறப்பதை குறித்து ஓமான் சுப்ரீம் கமிட்டி இன்னும் எந்த முடிவும் அறிவிக்கவில்லை என ஓமானின் செய்தி நிறுவனமான ஓமான் அப்செர்வ் தெரிவித்துள்ளது.

பொது பூங்காக்கள், மசூதிகள், கடற்கரைகள், மால்கள், சாதாரண உணவகங்களில் உணவருந்துவது, முடிதிருத்தும் கடைகள், அழகு நிலையங்கள் மற்றும் பொது பேருந்துகள் ஆகியவை மீண்டும் இயங்க இன்னும் அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோஃபர் கவர்னரேட் இன்னும் திறக்கப்படவில்லை.

கடந்த திங்கட்கிழமை கொரோனா வைரஸால் 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 10 பேர் உயிரிழந்துள்ளது.

இதற்கிடையில், COVID-19 இன் பொருளாதார விளைவுகளை ஆய்வு செய்வதற்காக பல்வேறு பொருளாதார துறைகளைச் சேர்ந்த வணிக உரிமையாளர்களுடன் ஓமன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி (OCCI) தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.