துபாய், புஜைரா மற்றும் ராஸ் அல் கைமாவில் புதிய 5 நிமிட கோவிட் -19 சோதனை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன

ஐந்து நிமிடத்தில் சோதனை முடிவுகளை அறிவிக்கும் புதிய நான்கு கோவிட்-19 சோதனை மையங்களை துபாய், புஜைரா மற்றும் ராஸ் அல் கைமா ஆகிய இடங்களில் திறக்கப்பட்டுள்ளன.

துபாயின் ரஷீத் துறைமுகம் மற்றும் அல் கவானீஜ் பகுதியில் உள்ள இரண்டு மையங்கள் உட்பட புதிய சோதனை மையங்கள் டிபிஐ லேசர் அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஐந்து நிமிடங்களுக்குள் சோதனை முடிவுகளைத் தரும் என அபுதாபி சுகாதார சேவை நிறுவனம் (Seha) ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதுபோன்ற நான்கு மையங்கள் அபுதாபியில் முன்னதாகவே செயல்பட்டு வருகின்றன.

தங்களை சோதிக்க விரும்புவோர் சேஹாவின் தொலைபேசி எண் மூலம் முன்பதிவு செய்யவேண்டும். சோதனை முடிவுகள் நெகடிவ்வாக இருந்தால் அடுத்த 48 மணி நேரத்திற்குள் அபுதாபிக்கு நுழையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லேசர் சோதனை செய்தவர்களுக்கு PCR சோதனை தேவைப்பட்டால் அவர் 320 திற்ஹம் கொடுத்து அதே மையத்தில் சோதனை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். PCR சோதனை முடிவு வெளிவரும் வரை அந்த நபர் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

ஐந்து நிமிட டிபிஐ லேசர் பரிசோதனையானது 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

லேசர் சோதனை செய்ய விரும்புவோர் தங்கள் அசல் எமிரேட்ஸ் ஐடியா எடுத்துச் செல்ல வேண்டும்.