துபாய்: விரைவில் புதிய தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இரு பேருந்து நிலையங்கள்

துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTO) தற்போது 17 புதிய பொது பேருந்து நிலையங்களை நிர்மாணித்து வருகிறது. அதில் இரண்டு பேருந்து நிலையங்கள் முடிவடையும் நிலையில் உள்ளது.

சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) தலைவர் மத்தார் முஹம்மத் அல் தயர் அவர்கள் இதுகுறித்து கூறுவதாவது, ஊத் மெத்தா மற்றும் அல் சத்வாவில் இரண்டு மாதிரி பொது பேருந்து நிலையங்களின் கட்டுமானப் பணிகள் 77% ஐ அடைந்து விட்டதாகவும், மேலும் கட்டுமானப் பணிகள் முழுவதும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்படும் என்று அவர் தெரிவித்தார்.

RTA மேற்கொண்டுள்ள இந்த முயற்சியானது பொது பயணிகளுக்காக பஸ் நிலையங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகவும், மக்கள் அன்றாட வாழ்க்கையில் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. மேலும் புதிய நிலையங்கள் தனித்துவமான, புதுமையான பொறியியல் வடிவமைப்புகளைப் பெற்று பொதுப் போக்குவரத்தின் புதிய கருத்துகளுடன் கலக்கிறது என்று அவர் கூறினார்.

சுமார் 9,640 சதுர மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் ஊத் மெத்தா நிலையத்தின் அஸ்திவாரங்கள் மற்றும் கான்கிரீட் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையம் பள்ளிகள், சமூக கிளப்புகள் மற்றும் வணிக மையங்களுக்கு அருகிலுள்ள மக்கள் அடர்த்தியான பகுதியில் அமைந்துள்ளது. இது துபாய் கல்வி நகரம் மற்றும் சர்வதேச நகரத்திலிருந்து வரும் பாதைகள் உட்பட பல பேருந்து வழித்தடங்களுக்கு உதவுகிறது.

அல் சத்வா நிலையத்திலும் அஸ்திவாரங்கள், நிலப்பரப்பு மற்றும் கான்கிரீட் பணிகள் முடிந்துள்ளது. பேருந்துகள், டாக்சிகள் மற்றும் தனியார் வாகனங்களுக்கான நிறுத்துமிடங்களைக் கொண்டுள்ள இந்நிலையம் 11,912 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த நிலையத்தில் ஒரு நாளைக்கு 7800 முதல் 15,000 பயணிகள் பயன்படுத்த முடியும்.

அல் சத்வா நிலையத்தில் பேருந்துகளுக்கு 227 பார்க்கிங் வசதிகள் உள்ளன. இந்த நிலையத்தில் பிக்கப் மற்றும் டிராப்-ஆஃப் பாயிண்ட், காத்திருப்பு மற்றும் காத்திருப்பு பேருந்துகளுக்கான பார்க்கிங், டாக்சிகள், ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான பார்க்கிங் மற்றும் பைக் ரேக்குகள் உள்ளன. இது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிரார்த்தனை அறைகள், பணியாளர் அலுவலகங்கள், பொது கழிப்பறைகள் மற்றும் முதலீட்டு பகுதிகளுடன் பொருத்தப்பட்ட பொது ஓய்வு பகுதிகளையும் கொண்டுள்ளது. இந்த நிலையத்தில் சுய சேவை கியோஸ்க்கள் (kiosks), நோல் கார்டு (nol card) இயந்திரங்கள், பஸ் தகவல் காட்சி பேனல்கள், வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி குறியீடு, ஏடிஎம்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளது.