சவூதி: தபூக்கில் உள்ள 186 பள்ளிகள் தங்கள் கட்டணத்தை பாதியாகக் குறைத்துள்ளது
சவூதி அரேபியாவில் உள்ள தபூக் நகரில் 186 தனியார் பள்ளிகள் தங்கள் முதல் செமஸ்டரின் கட்டணத்தை பாதியாக குறைக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.
பள்ளி உரிமையாளர்களின் இந்த செயல் சுமார் 30,000 மாணவர்களுக்கு பயனளிக்கும் என்று கல்வி அதிகாரி ஒருவர் சவூதி பத்திரிகை நிறுவனத்திடம் (SPA) கூறியுள்ளார்.
தபூக்கின் கல்வி இயக்குநரகம் தொடங்கிய இம்முயற்சியானது கோவிட்-19 இன் பொருளாதார தாக்கத்தை குறைக்க உதவும்.
இந்த முயற்சியானது தனியார் மற்றும் சர்வதேச பள்ளிகளின் உரிமையாளர்கள் மற்றும் மழலையர் பள்ளி மாணவர்களால் செய்யப்படும் தேசிய கடமையை பலப்படுத்துகிறது என்று தபூக் கல்வி இயக்குநரகத்தின் இயக்குநர் ஜெனரல் இப்ராஹிம் அல்-ஒமாரி தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 30 ஆம் தேதி புதிய கல்வி ஆண்டு தொடங்க இருப்பதாகவும், கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தொலைதூரக் கல்வித் திட்டத்தை ஊக்குவிப்பதாகவும் கல்வி அமைச்சர் ஹமீத் அல் ஷேக் கூறினார்.