நாடு திரும்பிய இந்தியர்களின் விவரத்தை வெளியிட்டது இந்திய வெளியுறவு அமைச்சகம்

பல்வேறு நாடுகளில் சிக்கித்தவித்த 5 லட்சத்திற்கு மேற்பட்ட இந்தியர்களை பாதுகாப்பாக நாடு திருப்பியுள்ளது இந்திய வெளியுறவு அமைச்சகம்

இது குறித்து ஜுலை 3 ஆம் தேதி இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவிக்கையில், இதுவரை வந்தே பாரத் திட்டத்தில் 5,03,990 பேர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் 137 நாடுளிலிருந்து அழைத்துவரப்பட்டனர் என்றார்.

மேலும் 860 ஏர் இந்தியா விமானங்கள், 1256 சிறப்பு விமானங்கள் மற்றும் 8 கடற்படை கப்பல்களின் மூலம் அழைத்துவரப்பட்டனர் என்றும் 95,220 இந்தியர்கள் நாட்டு எல்லையில் உள்ள சோதனை சாவடி மூலம் வந்தவர்கள் என்றார்.

வந்தே பாரத் திட்டத்தின் மூன்று கட்டங்கள் நிறைவடைந்து நான்காம் கட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.