குவைத்தில் இனி புதிய விசா கிடையாது!
அவசர மந்திரி குழுவின் ஒப்புதல் இல்லாமல் உலகில் உள்ள எந்த நாட்டு மக்களுக்கும் குவைத்தில் எந்தவிதமான நுழைவு விசாவும் வழங்கப்படாது என அமைச்சரவை குழு இன்று அறிவித்துள்ளது.
குவைத் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் தாரிக் அல் முஸ்ரிம் கூறுவதாவது, கொரோனல் அவசர மந்திரி குழுவின் ஒப்புதல் பெற்றவரை தவிர வேறு எந்த வித நாட்டை சேர்ந்தவருக்கும் நுழைவு விசா தரப்படமாட்டாது என்று தீர்மானம் செய்துள்ளது என செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 18 செவ்வாய்க்கிழமை முதல் குவைத் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான நான்காவது கட்டத்திற்கு செல்ல முடிவு செய்தது. இருப்பினும் இரவு 9:00 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கும் எனவும் அறிவித்தார்.