ஓமானில் பிச்சை எடுத்தால் சிறை மற்றும் 100 OMR அபராதம்

ஓமான் அரசு தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்: குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மசூதிகள், சாலைகள், கடைகள் மற்றும் பொது இடங்களில் பிச்சை எடுத்தால் ஒரு வருடம் வரை சிறைத் தண்டனையும் நூறு ஓமானி ரியாலும் (100 OMR) அபராதமாக விதிக்கப்படும்.

குற்றவாளியிடமிருக்கும் பணத்தை நீதிமன்றம் பறிமுதல் செய்யும் மற்றும் அவர் ஒரு வெளிநாட்டவராக இருந்தால் அவரை நாட்டிலிருந்து நாடு கடத்த உத்தரவிடப்படும்.

மேலும் ஒரு மைனரைப் பிச்சை எடுக்க பயன்படுத்துவது அல்லது பிச்சை எடுக்கும் நோக்கத்துடன் அவரை வேறொருவரிடம் ஒப்படைப்பவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் நூறு ஓமானி ரியால்ஸ் அபராதமாக விதிக்கப்படும்.

குற்றவாளி மைனரின் பாதுகாவலர், அறங்காவலர், அவரது கவனிப்பாலர் அல்லது மேற்பார்வையில் ஒப்படைக்கப்பட்ட நபராக இருந்தால் அவருக்கு தண்டனை இரட்டிப்பாகும்.

பிச்சை எடுப்பது ஒரு குற்றம் மற்றும் நாகரிகமற்ற செயல். இது பல ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது. பிச்சைக்காரர்களுடன் பழகுவதைத் தவிர்க்கும்படியும் அந்த அறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது.