கொரோனாவால் அதிக பாதிப்படைந்த வளைகுடா நாடுகளில் கத்தார் இரண்டாம் இடத்தில் உள்ளது
கத்தாரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துவிட்டதாக கத்தாரின் சுகாதார அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது.
கொரோனாவால் அதிக பாதிப்படைந்த வளைகுடா நாடுகளில் கத்தார் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை 1,00,345 பேருக்கு நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மட்டும் 546 புதிய வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் 133 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 நபர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 1,614 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 93,898 ஆகும். 706 பேர் அதிக பாதிப்புடன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
புதிதாத 546 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கத்தாரின் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.