ஓமான்: ஆன்லைனில் சுதந்திர தினத்தை கொண்டாட இந்திய தூதரகம் அழைப்பு
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய தூதரகம் கொடி ஏற்றும் விழாவை ஏற்பாடு செய்துள்ளது. தற்போது உள்ள COVID-19 தொற்றுநோய் மற்றும் சமூக தொலைதூர விதிமுறைகளால் தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மட்டுமே தூதரகத்தில் கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக ஓமானிற்கான இந்திய தூதரகம் யூடியூப் (youtube) தளத்தில் நேரலையில் காண ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து தூதரகம் தெரிவித்ததாவது, இந்திய சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் இந்தியாவின் 74 வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் சேர அழைக்கப்படுகிறார்கள். ஆகஸ்ட் 15 2020 சனிக்கிழமை காலை 8:40 மணிக்கு ஆன்லைனில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.