குவைத்: வெளிநாட்டினர் தனியார் துறையிலிருந்து அரசு துறைக்கு விசாவை மாற்றத் தடை!

வெளிநாட்டினர் தனியார் துறையிலிருந்து அரசு துறைக்கு விசாவை மாற்றத் தடைசெய்வதாக மனிதவளத்திற்கான பொது அதிகாரசபையின் இயக்குநர் ஜெனரல் அகமது அல்-மவ்சா தெரிவித்துள்ளார்.

ஜூலை 14 அன்று இதற்கான முடிவு வெளியிடப்பட்டது. இது அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர் செயல்படுத்தப்படும் என்று அல்-மவ்சா தெரிவித்தார்.

இந்த விசா மாற்றத்தில் 3 பிரிவுகளில் உள்ளவர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

  1. குவைத் குடிமக்களை மனைவியாக மணந்தவர்கள்
  2. பாலஸ்தீனியர்கள்
  3. மருத்துவத் துறையில் பயிற்சி பெற உரிமம் பெற்ற மருத்துவத் துறையில் உள்ள சுகாதார வல்லுநர்கள்