கொரோனாவின் இரண்டாவது அலைக்கு நாங்கள் தயாராகி வருகிறோம் – குவைத் சுகாதார அமைச்சகம்

குவைத்தில் கொரோனா நோய்தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதாக சுகாதார அமைச்சரவையின் செயல் துணைச் செயலாளர் டாக்டர் அப்துல் ரஹ்மான் அல் முத்தேரி உள்ளூர் அரபு செய்தித் தாளான அல்காபாஸிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அல் முத்தேரி கூறியதாவது, நான்காவது கட்டத்தில் 50% க்கும் அதிகமான உணவகங்களை சமூக இடைவெளியுடம் திறக்கப்படும் என்றார்.

மேலும் உள்நாட்டு நிலைமையை கண்காணிக்கப்பட்டு வருவதால் கொரோனா வைரஸின் எந்தவொரு இரண்டாவது அலைகளை எதிர்கொள்ள சுகாதார அமைச்சகம் திட்டங்களை உருவாக்கி வருகிறது. அக்டோபர் மாதத்தில் பருவகால காய்ச்சல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கொரோனா உடன் கலக்கக்கூடும்.

இதை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் சுகாதாரத்தை தேவைகளுக்கு அரசுடன் சரியாக ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை அறிவிப்பதில் சுகாதார அமைச்சகம் வெளிப்படைத்தன்மையுடன் உள்ளது. கொரோன வைரஸின் ஆரம்பக்கட்டத்தில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் சுகாதார தேவைகளுக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என அவர் கூறினார்.