ஓமானில் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 8 வரை பொது முடக்கம்; ஈத் பிரார்த்தனைக்கும் தடை!

கொரோன வைரஸின் பறவலை தடுக்க ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 8 வரை இரண்டு வாரங்களுக்கு பொது முடக்கத்தை ஓமானின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

உள்துறை மந்திரி திரு. ஹம்மூத் பின் பைசல் அல் புசைதி தலைமையிலான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான வழிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் ஒரு பகுதியாக மக்கள் நடமாட்டத்தை தடுக்கும்படியும், பொது இடங்களில் உள்ள அனைத்து கடைகள் மாலை 7 மணி முதல் காலை 6 மணி வரை மூடப்பட வேண்டும், தீவிர ரோந்து மற்றும் பகல் நேரங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து வகையான கூட்டங்களுக்கு குறிப்பாக ஈத் பிரார்த்தனை மற்றும் பாரம்பரிய ஈத் சந்தைகள் போன்றவற்றுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.