சர்வதேச பாதுகாப்பு விருது 2020 ஐ சவூதி ரயில்வே நிறுவனம் வென்றது

பாதுகாப்பு நடவடிக்கைகளை சரியாக நிர்வகித்ததற்காக சர்வதேச பாதுகாப்பு விருது 2020 ஐ சவூதி ரயில்வே நிறுவனம் வென்றுள்ளது.

சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களை சரியாக நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு பிரிட்டிஷ் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் வருட வருடம் சர்வதேச பாதுகாப்பு விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதில் இந்த ஆண்டுக்கான சர்வதேச பாதுகாப்பு விருது 2020 ஐ சவூதியின் ரயில்வே நிறுவனம் (SAR) தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வென்றது.

இதுகுறித்து ரயில்வே தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பஷர் பின் காலித் அல்-மாலிக் கூறுகையில், நாட்டின் ரயில் நெட்வொர்க்கை இயக்குவதில் மிக உயர்ந்த பாதுகாப்பு தரங்களைப் பயன்படுத்துவதை நிறுவனம் தனது பிரதான திட்டமாக வைக்கிறது.

வேலைச் சூழலில் பாதுகாப்பை உறுதி செய்வதில் திறம்பட நிரூபிக்கப்பட்ட சர்வதேச சட்டங்களைப் பின்பற்றுவதன் மூலம் அதன் ரயில்களின் மேலாண்மை, செயல்பாடு மற்றும் பராமரிப்பில் பாதுகாப்பு கலாச்சாரத்திற்கு SAR முன்னுரிமை அளிக்கிறது என்று அவர் கூறினார்.

மேலும் அல்-மாலிக் கூறினார், SAR இத்தகைய சர்வதேச விருதுகளை வென்றது என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இது சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் முடிவுகளை பிரதிபலிப்பாகும் என்றார்.