குவைத் ஏர்வேஸின் தலைவர் யூசுப் அல் ஜாசெம் பதவி விலகினார்
குவைத் ஏர்வேஸ் இயக்குநர்கள் குழுவின் தலைவர் யூசுப் அல் ஜாசெம் தனது இயக்குநர்கள் குழுவின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாம செய்வதாக நிதியமைச்சர் பராக் அல் ஷைத்தனிடம் கடிதம் கொடுத்தார்.
அந்த ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அல்-கபாஸ் தினசரி நாளிதழ் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 5 ல் தனது ராஜினாமாவை சமர்ப்பித்ததாக அல் ஜாசெம் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். அது அப்போது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பின்னர் அவர் மீண்டும் ஆகஸ்ட் 6 ல் சமர்ப்பித்தார். தற்போது அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூசுப் அல் ஜாசெம் அவர்கள் 2018 ஏப்ரல் மாதம் முதல் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேல் குவைத் ஏர்வேஸ் இயக்குநர்கள் குழுவின் தலைவர் பதவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.