நெடுஞ்சாலைகளில் குறுக்கே நடந்து சென்றால் 2000 ரியால் அபராதம் – சவூதி காவல்துறை எச்சரிக்கை
பாதசாரிகள் நெடுஞ்சாலைகளில் குறுக்கே கடந்து சென்றால் 1000 முதல் 2000 ரியால் வரை அபராதமாக விதிக்கப்படும் என்று சவூதி போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.
புதன்கிழமை மாலை காவல்துறை செய்த ஒரு ட்வீட்டில், நெடுஞ்சாலைகளைக் கடக்கும் நபர்கள் தங்கள் உயிருக்கு தாங்களே ஆபத்தை விளைவிப்பதாகவும், போக்குவரத்துக்கு குழப்பத்தை உருவாக்குவதாகவும், போக்குவரத்து விபத்துகளுக்கு காரணமாக இருப்பதாகவும் அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
சவூதி சாலைகளில் மிகக் குறைந்த அளவிலே நடைபாதை பாலங்கள் உள்ளன என்பதும் உண்மை. உதாரணத்திற்கு ஜித்தாவில் உள்ள கிங் அப்துல் அஜீஸ் சாலையில் (சுமார் 18 கி.மீ) நடைபாதை பாலம் எதுவும் இல்லை. அங்கு கார்களுக்கான வேக வரம்பு மணிக்கு 100 கி.மீ ஆக உள்ளது.
ஜித்தாவில் உள்ள பிரின்ஸ் மஜெத் சாலையில் (சுமார் 10 கி.மீ) ஒரே ஒரு நடைபாதை பாலம் மட்டுமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நெடுஞ்சாலைகளை கடப்பது இன்றும் ஒரு சிக்கலாக உள்ளது. எனினும் நெடுஞ்சாலைகளைக் கடக்க நடைபாதை பாலங்களைப் பயன்படுத்துவதே கட்டாயமாகும்.