அமீரகத்தை பச்சை பட்டியலில் இருந்து பிலிப்பைன்ஸ் நீக்கியது
ஐக்கிய அரபு அமீரகத்தை பச்சை பட்டியலில் இருந்து நீக்கியது பிலிப்பைன்ஸ் நாடு. அமீரகத்தில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு செல்வோர் இனி ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுப்படுவார்கள்.
பிலிப்பைன்ஸ் அரசாங்கம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமீரகம் பச்சை அல்லது சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அது ‘மஞ்சள்’ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஜனவரி 16 முதல் நடைமுறைக்கு வரும் எனவும், ஜனவரி 31 வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.