சவூதி: ரியாத்தில் செவிலியர் ஒருவர் மனநல நோயாளியால் குத்திக் கொல்லப்பட்டார்
சவூதி செவிலியரான அப்துல் கரீம் அல் முத்தாரி செவ்வாய்க்கிழமை பிற்பகல் நேரத்தில் மனநலம் குன்றிய நோயாளிக்கு பணிவிடை செய்யும் போது அவரால் கொடூரமாக கொல்லப்பட்டார்.
ரியாத்தில் உள்ள மனநல நிர்வாக வளாகம் ஒன்றில் சிறப்பு செவிலியராக பணியாற்றி வந்த அல் முத்தாரி வீட்டுல் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போது ஒரு மனநல நோயாளியால் கொடூரமாக கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
இது குறித்து அல் முத்தாரியின் உறவினர் தெரிவிக்கையில், சிகிச்சை அளிப்பதற்காக வீட்டிற்கு வருவதற்கு முன்பு நோயாளியின் தந்தை அவரை அழைத்து நோய்வாய்ப்பட்ட மகன் வீட்டில் தனியாக இருப்பதாக தந்தை தெரிவித்தார். மேலும் நோயாளி அவரை கத்தியால் தாக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றும் கூறினார்.
28 வயதான அல் முத்தாரிக்கு மூன்று இளம் மகள்கள் உள்ளனர். அவர் தாராள மனப்பான்மை மற்றும் நல்லொழுக்கங்களை கொண்ட அன்பான மனிதர் என உறவினர் நினைவு கூர்ந்தார்.
இது போன்ற அசம்பாவித சம்பவம் நேராமல் பாதுகாக்க மனநல நோயாளியின் வீட்டிற்கு செல்லும்போது செவிலியனருடன் ஒரு மருத்துவ ஊழியரும் இருக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
ரியாத்தில் உள்ள மனநல வளாகத்தின் நிர்வாகம் மற்றும் ரியாத் நர்சிங் துறையும் அல் முத்தாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.