10 லட்சம் மருத்துவர்களுக்கான இலவச பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியது அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகம் 10 லட்சத்திற்கும் அதிகமான சுகாதார நிபுணர்களுக்கு “நீர்வீழ்ச்சிகள்” என அழைக்கப்படும் இலவச பயிற்சி திட்டத்தை புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.

இந்த முயற்சியில் மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மருத்துவமனை மேலாண்மை மற்றும் மனிதாபிமான துறைகளில் நிபுணர்களுக்கு தொடர்ச்சியான கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தொலைதூர கற்றல் முயற்சியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார். இது 140 வல்லுநர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள 67 கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் என்றார்.

ஷேக் முஹம்மது இந்த முயற்சி சர்வதேச மருத்துவ சகோதரத்துவத்தை ஆதரிப்பதற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்றார். இதை துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷேக் சைஃப் பின் சயீத் அல் நஹ்யான் பார்வையிடுவார் என்றார்.

“நீர்வீழ்ச்சிகள்” என்ற இலவச பயிற்சி திட்டத்தில் (https://waterfalls.ae/) 14 மருத்துவத் துறைகளில் ஆன்லைன் மருத்துவப் பயிற்சி அமர்வுகளை வழங்கும். இந்த பயிற்ச்சியானது சிறப்பு விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் கல்வி அமர்வுகள், மருத்துவம், மருந்தகம், ஊட்டச்சத்து பொது சுகாதாரம், நர்சிங், பல் மருத்துவம் மற்றும் மருத்துவமனை மேலாண்மை போன்ற பல்வேறு துறைகளில் மிக முக்கியமான தலைப்புகளை உள்ளடக்கியது.

உலகெங்கிலும் இருந்து 140 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்கள் விஞ்ஞான விரிவுரைகள், கல்வி அமர்வுகள் மற்றும் பயிற்சி பட்டறைகளை தொலைதூரத்தில் வடிவமைத்து மேம்படுத்தும் முயற்சியில் பங்கேற்றனர்.

இந்த முயற்சியில் பங்கேற்கும் சர்வதேச அறிவியல் மற்றும் கல்வி அமைப்புகளிடமிருந்து பயிற்சியாளர்கள் சான்றிதழ் பெறுவார்கள். பயிற்சியில் பங்குபெறும் மருத்துவர்கள் இந்த இலவச பயிற்சியால் நிதிச்சுமை இல்லாமலும், இது ஆன்லைன் வகுப்புகளாக இருப்பதால் தங்கள் பணியை விட்டு வெளியேறாமலும் பயில்வார்கள்.