அமீரகம்: ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்காத நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

ஊதிய பாதுகாப்பு தொடர்பான 2016 இன் ஆணை எண் 739 இன் படி நாட்டில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களும் வங்கி மூலம் மட்டுமே சம்பளத்தை வழங்க வேண்டும்.

சம்பளம் வழங்குவதில் தாமதம் மற்றும் விதிகளை பின்பற்றத் தவறிய நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மனிதவள மற்றும் குடியரசியல் அமைச்சகம் திங்களன்று நினைவூட்டியுள்ளது.