துபாய் விமான நிலையத்தில் செயல்பட்டுவந்த இலவச கோவிட்-19 சோதனை மையம் இடமாற்றம் செய்யப்பட உள்ளது
துபாய் விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் செயல்பட்டுவந்த இலவச கோவிட்-19 சோதனை மையம் இனி அங்கு செயல்படாது எனவும், அவை இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 16 முதல் விமான நிலையத்திற்கு வெளியே உள்ள ஷபாப் அல் அஹ்லி கால்பந்து கிளப்பில் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இவை அல் நஹ்தா தெருவின் அல் முல்லா பிளாசாவுக்கு அருகில் அமைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை உட்பட தினமும் காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இம்மையம் செயல்படும்.
இலவச சோதனை செய்ய விமானத்தின் டிக்கெட் அல்லது முன்பதிவு செய்யப்பட்டதின் ஆதாரத்தை காண்பிக்க வேண்டும். இவை பயணத்திலிருந்து 96 மணி நேரத்திற்குள் இருக்க வேண்டும்.
ஆன்டிஜென் சோதனையின் எதிர்மறை முடிவை பெற்றுள்ள பயணிகளின் பாஸ்போர்ட்டுகளில் ‘Fit to Travel’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்படும். பயணிகள் தங்கள் இறுதி இடத்தை அடையும் வரை அந்த ஸ்டிக்கரை அகற்ற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.