விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் விமானி ஒரு முன்னால் இந்திய விமானப்படையின் “போர் விமானி”

கேரளா மாநிலம் கோழிக்கோடு விமானநிலையத்தில் துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். அதில் விமானத்தின் விமானி தீபக் வசந்த் சதேவம் ஒருவர். இவர் ஒரு முன்னால் இந்திய விமானப்படை அதிகாரி என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவர் ஒரு அனுபவமிக்க போயிங் 737-800 ரக விமானத்தின் விமானி மற்றும் முன்பு ஏர்பஸ் ஏ -310 விமானத்தை இயக்கிவந்தவர் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் அவரது இணை விமானி அகிலேஷ் குமார் உயிரிழந்துள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமியில் இவர் ‘மரியாதைக்குரிய வாள்’ என்ற பட்டத்தை வென்றதாகவும், வணிக ரீதியாக மாறுவதற்கு முன்பு இவர் ஒரு “திறமையான போர் விமானி” என்றும் ஏர் இந்தியா தனது ‘விபத்து புல்லட்டினில்’ தெரிவித்துள்ளது. மேலும் அவருக்கு 36 வருட பறக்கும் அனுபவம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இவரது குடும்பம் மும்பையிலிருந்து கோழிக்கோடு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு கேப்டனின் பிரேதம் பரிசோதனைக்காக வைக்கப்படுள்ளது என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மற்றொரு விமானி அகிலேஷ் குமாரின் குடும்பத்தை டெல்லியில் இருந்து கோழிக்கோட்டிற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.