விசிட் விசாவின் காலம் முடிந்தவர்களுக்கு மேலும் ஒரு மாதகால அவகாசம் – அமீரகம் அறிவிப்பு

மார்ச் 1 க்குப் பிறகு காலாவதியான விசிட் விசாவில் உள்ளவர்களை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற அமீரக அரசு முன்பு உத்தரவிட்டிருந்தது. தற்போது மேலும் ஒரு மாதகாலம் நீட்டிக்கப்படுவதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் திங்களன்று அறிவித்துள்ளது.

இதனால் காலாவதியான விசிட் விசாவில் உள்ளவர்கள் அடுத்த ஒரு மாதத்திற்கு எந்தவிதமான அபராதமும் இல்லாமல் அமீரகத்தில் தங்கலாம்.