செயற்கையாக உருவாக்கப்பட்ட தேரா தீவுக்கு செல்ல ஐந்து புதிய பாலங்கள் இன்று திறக்கப்பட்டது

துபாயில் உள்ள தேரா தீவுக்கு செல்வதற்காக ஐந்து புதிய பாலங்களை சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டதாக எமிரேட்ஸ் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

நக்கீல் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பாலங்கள் துபாய் நீர் கால்வாயைக் கடந்து ஏற்கனவே இருக்கும் பாலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய பாலங்கள் அல் கலீஜ் மற்றம் அபு பக்கர் அல் சித்திக் வீதிகளின் சந்திப்பில் அமைந்துள்ளது.

இந்த பாலங்கள் 2,571 மீட்டர் நீளம் மற்றும் ஒரு மணி நேரத்திற்கு மொத்தம் 20,700 வாகனங்கள் திறன் கொண்டவை என்று ஆர்டிஏ நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவர் மத்தார் முகமது அல் தய்யர் தெரிவித்தார்.

https://twitter.com/DXBMediaOffice/status/1292006129384525824?s=19

தேரா தீவு நக்கீல் நிறுவனத்தால் செயற்கையாக உருவாக்கப்பட்டது. அங்கு நூற்றுக்கணக்கான ஹோட்டல்கள், குடியிருப்புகள், கலப்பு பயன்பாட்டு கட்டிடங்கள் மற்றும் மெரினாக்கள் உருவாக இருக்கின்றன.