700 டன் அம்மோனியம் நைட்ரேட் சென்னை துறைமுகத்தில் கண்டறியப்பட்டுள்ளது!
லெபனானில் மெகா வெடிப்புக்கு காரணமான அம்மோனியம் நைட்ரேட் கிட்டத்தட்ட 700 டன் 2015 முதல் சென்னை துறைமுகத்தில் உள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்திற்கு கடந்த 2013 ஆண்டு ரஷ்யாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் துறைமுகத்தில் தேக்கி வைக்கப்பட்டது. கடந்த செவ்வாய்கிழமை இதில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 153 பேர் உயிறிழந்தனர் மற்றும் 5,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதன் விளைவாக இந்திய அதிகாரிகள் நாட்டில் உள்ள அனைத்து துறைமுகங்களில் அபாயகரமான பொருட்களை கண்டறிய உத்தரவிட்டனர். இதில் சென்னை துறைமுகத்தில் 690 டன் அம்மோனியம் நைட்ரேட் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இது ஒரு இந்திய நிறுவனம் 2015 ஆம் ஆண்டில் தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும், இது உரங்களின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மோனியம் நைட்ரேட் ஒரு மணமற்ற படிக உப்பு ஆகும். இது ஏராளமான தொழில்துறை வெடிப்புகளுக்கு காரணமாக உள்ளது. இந்த எரிபொருள் எண்ணெய்களுடன் இணைந்தால் கட்டுமானத் தொழிலில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு சக்திவாய்ந்த வெடிபொருளாக உருவாகிறது.
பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அம்மோனியம் நைட்ரேட்டை கால்சியம் கார்பனேட்டுடன் கலந்து பாதுகாத்து வருகின்றது.
1984 ஆம் ஆண்டு இந்தியாவின் போபாலில் உள்ள ஒரு பூச்சிக்கொல்லி தொழிற்சாலையில் இருந்து ஐசோசயனேட் கசிந்து 3,500 உயிரிழந்தனர். இது வரலாற்றில் மிக மோசமான தொழில்துறை பேரழிவுகளில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.