ஓமானில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழப்பு
ஓமானில் கொரோன தொற்றால் ஆகஸ்ட் 7 வெள்ளிக்கிழமையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக ஓமான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் 354 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 289 பேர் ஓமானியர்கள் மற்றும் 62 பேர் வெளிநாட்டவர்கள். மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் 172 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
1353 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்துள்ளனர். ஓமானில் இதுவரை கொரோனாவால் மொத்தம் 81,067 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 72,263 பேர் குணமடைந்து உள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் அதிக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஓமான் 32 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.