ஓமானில் கொரோன பாதிக்கப்பட்டவர்களில் நான்கில் மூன்று பேர் குணமடைந்துள்ளனர்!
கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் இதுவரை 76 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த தொற்றிலிருந்து வெற்றிகரமாக மீண்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது நான்கில் மூன்று பேர் குணமடைந்துள்ளனர்.
மஸ்கத்தில் மட்டும் இதுவரை 40,023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 33,212 பேர் குணமடைந்துள்ளனர். இது 82.9 சதவீத மீட்பு வீதத்தை சுட்டிக்காட்டுகிறது. விலாயத் முத்ராவின் மீட்பு விகிதமானது 89 சதவீதமாக உள்ளது.
வடக்கு பதினாவில்13,070 வழக்குகளும் அதில் 8,336 குணமடைந்தவர்களும் பதிவாகியுள்ள. இதன் மீட்பு விகிதம் சுமார் 63.7 சதவீதமாகும். தெற்கு பதினாவின் 9,080 வழக்குகளும் அவற்றில் 6,401 குணமடைந்தவர்களும் பதிவாகியுள்ள. இதன் விகிதம் 70 சதவீதத்தை விட சற்று அதிகமாக உள்ளது.
அல் தகிலியாவின் 4,703 வழக்குகளும் அதில் 3,351 குணமடைந்தவர்களும் உள்ளனர். இது 71.25 சதவீத மீட்பு வீதத்தைக் காட்டுகிறது. அதே நேரத்தில் அத் தஹிராவில் இது 69.7 சதவீதமாக உள்ளது. 1,733 வழக்குகளும் அதில் 1,208 குணமடைந்தவர்களும் உள்ளனர்.
தெற்கு அஷ் ஷர்கியாவில் 2,455 வழக்குகள் பதிவாகியுள்ளன மற்றும் 2,085 குணமடைந்துள்ளனர். இதன் மீட்பு விகிதமானது 84.9 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில் வடக்கு அஷ் ஷர்கியாவில் மீட்பு விகிதமானது 67 சதவீதமாக உள்ளது. இங்கு 2,099 வழக்குகள் அதில் 1,412 குணமடைந்துள்ளனர்.
அல் வுஸ்டாவில் 1,591 வழக்குகளும் அதில் 1,481 குணமடைந்துள்ளனர். இதன் மீட்பு விகிதம் நாட்டின் மிக உயர்ந்த எண்ணிக்கையாக 93 சதவீதமாக உள்ளது. தெற்கு தொஃபரில் 2,894 வழக்குகளும் அதில் 2,074 குணமடைந்துள்ளனர். இதன் விகிதம் 71 சதவீதமாகும்.
நாட்டின் எல்லைப் பகுதியான புரைமியில் 864 வழக்குகள் உள்ளன. அதில் 638 பேர் குணமடைந்துள்ளனர். இதன் விகிதம் 76.5 சதவீதமாக உள்ளது.