துபாய்: ஈத் அல் ஆதாவின் விடுமுறை நாட்களில் மட்டும் சுமார் 30 லட்சம் பேர் பொது போக்குவரத்தை பயண்படுத்தியுள்ளனர்

ஈத் அல் ஆதா விடுமுறை நாட்களான ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை நாட்களில் துபாயில் மட்டும் சுமார் 30 லட்சம் பேர் பொது போக்குவரத்தை பயண்படுத்தி உள்ளனர் என துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.

பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கான அனைத்து சுகாதார மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை ஆர்டிஏ மேற்க்கொண்டு வருகின்றது என தெரிவித்துள்ளது.

https://twitter.com/DXBMediaOffice/status/1291384027740614656?s=19

விடுமுறை நாட்களில் மொத்தம் 28,53,710 பேர் பொது போக்குவரத்தில் பயணித்துள்ளார். அதில் மெட்ரோவின் சிவப்பு மற்றும் பச்சை வழிகளில் 9,09,106 பயணிகளும், பொது பேருந்துகளில் 7,15,802 பயணிகளும், கடல் போக்குவரத்தில் 97,131 பயணிகளும், டாக்ஸிகள் 9,72,868 பயணிகளும் மற்றும் மற்றவர்களில் 42,608 பேரும் பயணித்துள்ளதாக ஆர்டிஏ தெரிவித்துள்ளது.