அமீரகத்தில் கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து வரும் கொரோன வழக்குகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களில் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கூட்டமாக உள்ள இடங்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்ந்து நான்கு நாட்களில் கொரோனவால் மரணங்கள் ஏதும் இல்லாதிருந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று இரண்டு பேரும், வியாழன் அன்று ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

அமீரகத்தில் இதுவரை 5 மில்லியனுக்கு அதிகமாக சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. அதில் இதுவரை 61,845 பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 354 பேர்கள் உயிரிழந்து உள்ளனர்.

சமூக விலகல் முக்கியமானது மற்றும் சமூகம் தங்கள் பாதுகாப்பைக் குறைப்பது விவேகமற்றது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.