அடுத்த 3 மாதங்களில் அரசாங்க பணியில் உள்ள 50% வெளிநாட்டவர்களை பணிநீக்கம் செய்ய குவைத் அரசு முடிவு
அரசு துறைகளில் உள்ள வெளிநாட்டவர்களை பணிநீக்கம் செய்ய குவைத் அரசு தொடங்கியுள்ளதாக அல் ராய் தெரிவித்துள்ளது.
அரசு துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாவர்களை 3 மாதங்களில் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் மற்றும் அரசு அமைச்சகங்களில் பணிபுரிபவர்களை துணை ஒப்பந்தக்காரர்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு மாற்றப்படுவார்கள் என அல் ராய் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து பாராளுமன்றத்தின் மனித வள மேம்பாட்டுக் குழுவின் தலைவர் எம்.பி. கலீல் அல் சலேஹ் தெரிவித்ததாவது, மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு பிரச்சினைக்கு தீர்வு காண குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் இதற்கான அறிக்கையை தயாரித்து அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்றார்.
அதில் அரசாங்கத் துறையில் தொழில்நுட்பமற்ற வேலைகளில் பணிபுரிய வெளிநாட்டினர்களை நீக்க வலியுறுத்தியும், பொதுத் பணித்துறைக்கு குவைத்தியர்களை பணியமர்த்தும் 11/2017 தீர்மானத்தை கடைபிடிக்குமாறு சிவில் சர்வீஸ் கமிஷனுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றார்.
2018 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அரசாங்கக் கொள்கையில் பெரும்பான்மையான வேலைகளில் வெளிநாட்டவர்களை விடுத்து குவைத்தியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும் என்ற அறிக்கையை சுட்டிக்காட்டினார்.
டிசம்பர் 2019 நிலவரப்படி 1,20,000 வெளிநாட்டினர் பொதுத்துறையில் பணிபுரிகின்றனர். 2018 ஆம் ஆண்டில் அரசாங்க நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 50,000 வெளிநாட்டவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.