அமீரக அரசு பொதுமக்களுக்காக இரண்டு இலவச கோவிட்-19 சோதனை மையங்களை திறந்துள்ளது!

புஜைராவில் உள்ள டிப்பாவில் இரண்டு கோவிட்-19 சோதனை மையங்களை ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) திறந்துள்ளது. இந்த மையங்களில் அமீரக குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் இலவசமாக கொரோனா சோதனை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரக உச்ச கவுன்சிலின் உறுப்பினரும் புஜைராவின் ஆட்சியாளருமான ஷேக் ஹமாத் பின் முகமது அல் ஷர்கியின் உத்தரவில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகம் உலகின் மிக விரிவான சோதனை மையங்களை கொண்டுள்ளது. இதன் மூலம் இதுவரை நாடு முழுவதும் உள்ள 50 லட்சம் பேருக்கு சோதனை செய்துள்ளது.

அமீரகத்தில் இதுவரை 61,352 பேருக்கு கொரோன உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 55,090 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர் மற்றும் 351 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமீரகம் 44 இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.