எக்ஸ்போ 2020 துபாயின் ஒரு நாள் நுழைவுச் சீட்டு 10 திர்ஹம் மட்டும்

எக்ஸ்போ 2020 துபாயில் ஒரு கோடி பார்வையாளர்கள் வருகை தந்ததை குறிக்கும் வகையில் வருகிற ஜனவரி 16 ஞாயிற்றுக்கிழமை நிகழ்வைப் பார்வையிட விரும்புவோருக்கு சிறப்பு நுழைவுச் சீட்டு 10 திர்ஹமுக்கு வழங்கப்படும் என்று அதன் ஏற்ப்பட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமைக்கான டிக்கெட்டுகள் ஜனவரி 14 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் எக்ஸ்போவின் இணையதளத்தில் அல்லது எக்ஸ்போ 2020 துபாய் நுழைவாயில்களில் கிடைக்கும். ஏற்கனவே சீசன் பாஸ் வைத்திருக்கும் பார்வையாளர்கள் கூடுதல் நுழைவுக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளம்: https://www.expo2020dubai.com/en/tickets-and-merchandise/tickets