உம்ரா புனித பயணத்தை தொடங்க சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் திட்டம்
ஹஜ்ஜுடைய காலம் முடிந்த பிறகு உம்ரா புனித பயணத்திற்கான தயாரிப்புகளை தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரையில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை கொண்டு அடுத்த உம்ரா பருவத்திற்கு தேவையான தயாரிப்புகளைத் தொடங்கப் போவதாக ஹஜ் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் டாக்டர் ஹுசைன் அல் ஷெரீப் தெரிவித்தார்.
ஹஜ் யாத்ரீகர்கள் தங்களை 7 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாகவும், சுகாதார அமைச்சகம் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று குறிப்பிட்டார்.
யாத்ரீகர்கள் அவர்களின் ஹஜ் யாத்திரை முடிந்தபின் அவர்கள் தங்கள் நாடுகளுக்கு செல்ல விரும்பினால் அவர்களை விமானநிலையம் வரை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.