கத்தார்: FIFA 2022 உலகக் கோப்பை போட்டியின் அட்டவணை வெளியீடு; நவம்பர் 21ல் முதல் போட்டி
கத்தாரில் 2022 நடக்கவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் போட்டியானது நவம்பர் 21 ஆம் தேதி அல் பைத் மைதானம் உட்பட நான்கு மைதானங்களில் நடக்க உள்ளது. இறுதி போட்டியானது டிசம்பர் 18 ஆம் தேதி லுசைல் மைதானத்தில் நடக்க உள்ளது.
பொத்தம் 8 மைதானங்களில் போட்டிகள் நடக்க உள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் நான்கு போட்டிகள் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிகளுக்கான முன்பதிவை https://www.fifa.com/tickets என்ற இணையதள வழியாக பெறலாம். இதற்கான விற்பனை பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் போட்டி நடைபெறும் மைதானமான அல் பைத்தில் சுமார் 60,000 நபர்கள் வரை அமரலாம். இறுதி போட்டி நடைபெறும் மைதானமான லுசைலில் சுமார் 80,000 நபர்கள் வரை அமரலாம் எனவும் மற்ற மைதானங்களில் 40,000 நபர்கள் வரை அமரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.