சென்னை உட்பட 6 இந்திய நகரங்களுக்கு குவைத் ஏர்வேஸின் விமான சேவை தொடக்கம்!
ஆகஸ்ட் 1 2020 முதல் குவைத் ஏர்வேஸ் தனது விமான சேவையை தொடங்க உள்ளது. இந்தியாவில் சென்னை, அகமதாபாத், டெல்லி, கொச்சி, மும்பை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 6 நகரங்களுக்கு மட்டும் முன்பதிவு செய்யலான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சவை குழு முடிவின் படி குவைத் ஏர்வேஸ் மூன்று கட்டங்களாக தனது விமான சேவையை தொடங்க உள்ளது. முதல் கட்டமாக ஆகஸ்ட் 1 முதல் 30 சதவீத விமாதங்களை இயக்க உள்ளது. மேலும் இரண்டாம் கட்டத்தில் 50 சதவீதமாக இருக்கலாம் எனவும், மூன்றாம் கட்டத்தில் 100 சதவீதமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குவைத் ஏர்வேஸின் இணையதளம் தெரிவித்துள்ளதாவது குவைத் ஏர்வேஸ் 2020 ஆகஸ்ட் 1 முதல் சில இடங்களுக்கு மட்டும் திட்டமிடப்பட்ட விமானங்களை மீண்டும் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது. குவைத் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்கள், இலக்கு மற்றும் அரசாங்கங்களின் வழிகாட்டுதல்களின்படி அதன் வணிக நடவடிக்கைகளை படிப்படியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
எங்கள் பயணிகள் பாதுகாப்பு, ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்ல ஆரோக்கியம் ஆகியவை எங்களது மிக உயர்ந்த முன்னுரிமை. உங்கள் எதிர்கால பயணத்தைத் திட்டமிட உங்களுக்கு உதவ எங்கள் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
மேலும் குவைத் மற்றும் வெளிநாட்டில் நிலவும் COVID -19 கட்டுப்பாடுகள் மற்றும் இயக்க நிலைமைகளைப் பின்பற்ற வேண்டியிருப்பதால் இந்த கடினமான சூழ்நிலையில் உங்கள் பொறுமையையும் ஒத்துழைப்பையும் கோருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.