ஓமான்: பெண் ஓட்டுநர்களால் இயக்கப்படும் டாக்ஸிகள் மஸ்கத்தில் தொடக்கம்

பெண் ஓட்டுநர்களால் மட்டுமே இயக்கப்படும் டாக்ஸி சேவை ஜனவரி 20, 2022 முதல் மஸ்கத் மாகாணத்தில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட உள்ளது. இது பெண் பயணிகள், மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெண் டாக்ஸி சேவைக்கு உடனடி அல்லது முன்கூட்டியே முன்பதிவு செய்யும் முறையின் மூலம் தேவைக்கேற்ப டாக்ஸிக்கள் அறிமுகப்படுத்த உள்ளது என்று போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஓமன் செய்தி நிறுவன (ONA) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜனவரி 20, 2022 வியாழன் முதல் மஸ்கத் மாகாணத்தில் சோதனை அடிப்படையில் இந்த சேவை தொடங்கப்படும், அதைத் தொடர்ந்து மற்ற மாகாணத்தில் விரிவாக்கப்படும் என்று ஓஎன்ஏ மேலும் தெரிவித்தது.