உலகின் பாதுகாப்பான நாடுகளில் முதல் ஐந்தில் மூன்று வளைகுடா நாடுகள்
நம்பியோவின் மத்திய ஆண்டு பாதுகாப்பு நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் வளைகுடா நாடுகள் மூன்று இடங்களை பிடித்துள்ளது. உலகின் குற்றக் குறியீட்டின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
கத்தார் 88.10 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், தைவான் 84.74 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், 84.55 புள்ளிகளுடன் ஐக்கிய அரபு அமீரகம் மூன்றாம் இடத்திலும், 79.50 புள்ளிகளுடன் ஜார்ஜியா நான்காம் இடத்திலும், ஓமானு 79.38 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளது.
133 நாடுகளில் நடத்தப்பட்ட ஒப்பீட்டில் கடைசி மூன்று இடங்களை தெற்கு ஆப்பிரிக்கா, பப்புவா நியூ கினி மற்றும் வெனிசுலா பிடித்துள்ளது.
வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா 21 ஆம் இடத்திலும், பஹ்ரைன் 22 ஆம் இடத்திலும், குவைத் 41 ஆம் இடத்திலும் உள்ளது.