இந்தியாவிலிருந்து அமீரகம் திரும்ப முன்பதிவு தொடக்கம் – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு
இந்தியாவில் சிக்கியுள்ள ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் ஜூலை 12 முதல் 15 நாட்களுக்கு இந்திய அரசாங்கத்தின் வந்தே பாரத் மிஷன் விமானங்களில் மீண்டும் அமீரகங்களுக்கு திரும்பலாம் என்று இந்திய சிவில் விமான அதிகாரிகள் அறிவித்துள்ளது.
இதற்கான பயணச்சீட்டை
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் வலைத்தளமான http://airindiaexpress.in அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் அமீரகத்தின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளிடையே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆயிரக்கனக்கான இந்தியர்களின் நீண்டகால காத்திருப்புக்கு இது முற்றுப்புள்ளி வைத்தது.
ஐ.சி.ஏ அல்லது ஜி.டி.ஆர்.எஃப்.ஏ ஒப்புதல் பெற்ற பயணிகள் மட்டுமே ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்க முடியும் என்று ஏர் இந்தியா வியாழக்கிழமை ட்வீட் செய்தது.
திரும்பி வரும் பயணிகள் பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என விமான நிறுவனம் கூறியது:
- வெளிநாட்டு விவகார இயக்குநரகத்திலிருந்து ஐ.சி.ஏ / ஜி.டி.ஆர்.எஃப்.ஏ ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.
- புறப்படுவதற்கு 96 மணி நேரத்திற்குல் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் சோதனையின் கோவிட் -19 எதிர்மறை முடிவுகளை பயணிகள் கொண்டு செல்ல வேண்டும்.
- சுகாதார அறிவிப்பு படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் (http://blog.airindiaexpress.in/wp-content/uploads/2020/07/Self-Declaration-Form-UAE.pdf)
- கோவிட் -19 டி.எக்ஸ்.பி ஸ்மார்ட் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.
- தனிமைப்படுத்தப்பட்ட படிவத்தை சமர்ப்பிக்கவும் (http://blog.airindiaexpress.in/wp-content/uploads/2020/07/Quarantine-Form-UAE.pdf)