8 லட்சம் இந்தியர்களை குவைத்தை விட்டு வெளியேற்ற தேசிய சட்டமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது

குவைத் நாட்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கோரும் வெளிநாட்டு ஒதுக்கீட்டு மசோதாவுக்கு தேசிய சட்டமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளதால் மொத்தம் 8 லட்சம் இந்தியர்களை குவைத்தை விட்டு வெளியேற்ற உள்ளது.

குவைத்தில் சுமார் 14.5 லட்சம் இந்தியர்கள் வேலை செய்துவருகின்றனர். குவைத்தின் வெளிநாட்டு ஒதுக்கீட்டு மசோதாவின்படி இந்தியர்கள் மக்கள் தொகையில் 15 சதவீதத்தை தாண்டக்கூடாது. இதன் விளைவாக 8,00,000 இந்தியர்களை குவைத்தை விட்டு வெளியேறக்கூடும்.

குவைத்தின் தற்போதைய மக்கள் தொகை 43 லட்சமாக உள்ளது. குவைத் நாட்டு மக்கள் 13 லட்சமாக உள்ளனர். மேலும் வெளிநாட்டவர்கள் 30 லட்சமாக உள்ளனர்.

எண்ணெய் விலை சரிவு மற்றும் கொரோனா வைரஸ் தொற்று நோயின் காரணமாக குவைத்தில் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைக்க சட்டமியற்றப்பட்டது

கடந்த மாதம் குவைத்தின் பிரதமர் ஷேக் சபா அல் காலித் அல் சபா வெளிநாட்டினரின் எண்ணிக்கையை 70 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்க முன்மொழிந்தார் என்பது குறிப்பித்தக்கது.

குவைத் சட்டமன்றத்தில் சபாநாயகர் கூறுகையில்,
குவைத் அதன் மக்கள்தொகை கட்டமைப்பில் ஒரு உண்மையான சிக்கலைக் கொண்டுள்ளது. இதில் 70 சதவீதம் பேர் வெளிநாட்டினர். 3.35 மில்லியன் வெளிநாட்டவர்களில் 1.3 மில்லியன் பேர் கல்வியறிவற்றவர்கள் அல்லது வெறுமனே எழுத படிக்க தெரிந்தவர்கள். குவைத் மக்களுக்கு உண்மையில் இவர்கள் தேவையில்லை என்று குவைத் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாங்கள் மருத்தவர்களையும் திறமையான மனிதர்களையும் சேர்த்துக்கொள்கிறோம். திறமையற்ற தொழிலாளர்களை அல்ல என தெரிவித்தார்.

சபாநாயகர் தாக்கல் செய்த வரைவுச் சட்டம் விரும்புவதாவது வெளிநாட்டினரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைய வேண்டும், இந்த ஆண்டு வெளிநாட்டினர் 70 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 65 சதவீதமாகவும் இருக்கும் என்று கூறினார்.

குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் கூற்றுப்படி குவைத் அரசாங்கத்தில் செவிலியர்கள், தேசிய எண்ணெய் நிறுவனங்களில் பொறியாளர்கள் மற்றும் ஒரு சிலர் விஞ்ஞானிகள் என பல்வேறு வேலைகளில் சுமார் 28,000 இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். பெரும்பான்மையான இந்தியர்கள் 5.23 லட்சம் பேர்கள் தனியார் துறைகளில் ஈடுபடுகின்றனர்.

கூடுதலாக சுமார் 1.16 லட்சம் பேர்கள் தனியாக வருமானம் ஈட்டுபவர்கள். மேலும் நாட்டில் 23 இந்திய பள்ளிகளில் சுமார் 60,000 இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்.

இந்த மசோதா இப்போது அந்தந்த குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனால் ஒரு விரிவான திட்டம் உருவாக்கப்படும். இது மற்ற நாட்டவர்களுக்கும் இதேபோன்ற ஒதுக்கீட்டை முன்மொழிகிறது.

குவைத் இந்தியாவுக்கு பணம் அனுப்புவதற்கான ஒரு சிறந்த நாடாகும். 2018 ஆம் ஆண்டில் குவைத்திலிருந்து இந்தியாவிற்கு கிட்டத்தட்ட 4.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை அனுப்பி உள்ளது என தெரிவித்தார்.