ஓமானில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு OMR 100 அபராதம் – புதிய பட்டியல் வெளியீடு
கொரோன கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான அபராதங்களை விதிப்பதற்கு கோவிட் -19 உச்சக் குழு முடிவு செய்தது. அதன்படி அபராதங்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை சட்ட விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
முழு பட்டியல்:
பணியிடங்களில் தொழிலாளர்கள் வருகை பதிவேட்டில் தொழிலாளர்கள் வரும் மற்றும் வேலை முடித்து போகும் நேரம் குறிப்பிடவில்லை எனில் 100 ஓமான் ரியால் அபராதமாக விதிக்கப்படும்.
பணியிடங்களில் அல்லது பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணியவில்லை எனில் 100 அபராதம்.
பணியிடங்களில் அல்லது தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் 60 சதமானத்திற்கு குறைவாக கைகளை சுத்தம் சய்ய சானிடைசர் இல்லையெனில் 100 அபராதம்.
தொழிலாளர்களின் உடல் வெப்பநிலையை கண்காணிக்க சாதனம் இல்லையெனில் 100 அபராதம்.
காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சினையை உடனடியாக கட்டறிய சாதனம் இல்லையெனில் 100 அபராதம்.
கொரோன தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் பெயர்களை பதிவு செய்ய சிறப்பு பதிவு இல்லையெனில் 100 அபராதம்.
பணியிடம், பணியாளர் தங்குமிடம், சாப்பாட்டு அரங்குகள் அல்லது போக்குவரத்து காத்திருப்பு பகுதிகளில் சமூக இடைவெளியை குறிக்கும் குறிப்பான்கள் இல்லையெனில் 100 அபராதம்.
பணியிடத்தில் வெவ்வேறு மொழிகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் இல்லையெனில் 100 அபராதம்.
தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் அவர்களின் எண்ணிக்கையை பதிவு செய்யும் பதிவேடு இல்லையெனில் 100 அபராதம்.
தொழிலாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்குமிடத்தில் அவர்களின் நுலைவு மற்றும் வெளியேற்றத்தை கண்காணிக்க காவலர்கள் இல்லையெனில் 500 அபராதம்.
தொழிலாளர்கள் தங்குமிடத்தில் போதுமான கழிவு பெட்டி இல்லையெனில் 100 அபராதம்.
தொழிலாளர்கள் சாப்பிடும் அரங்கில் வருகை பதிவேடு இல்லையெனில் 100 அபராதம்.
வேலை உபகரணங்கள் மற்றும் கருவிகளை சுத்தப்படுத்துவதில்லை எனில் 100 அபராதம்.
தொழிலாளர்களுக்கு முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு பற்றிய பயிற்ச்சி அளிக்கவில்லை எனில் 100 அபராதம்.
தொழிலாளர்கள் இடைவெளி விடாமல் போக்குவரத்து பயணம் செய்தால் 300 அபராதம்.
குழுவின் முடிவுகளில் வேறு ஏதேனும் மீறினால் 100 அபராதம்.
தொழிலாளர்களை குழுக்களாக பிரித்து பணியிடங்களில் அவர்களுக்கு தனித்தனி அறைகள் மற்றும் கழிப்பறைகள் அமைக்கவில்லை எனில் 300 அபராதம்.
தொழிலாளர்கள் தங்கும் அறையில் சரியான எண்ணிக்கை, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை சரியாக கடைப்பிடிக்கப்படவில்லை எனில் 500 அபராதம்.